நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஜீஸ் தலைமையில் இன்று (15) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஒன்றியத்தின் செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.எம். இப்னு அஸார் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உப தலைவருமான எம்.எஸ்.எம். முபாறக், ஒன்றியத்தின் ஆலோசகரும் நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டத்தரணி சௌபி எச். இஸ்மாயில், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபையின் தலைவர் ஏ.எம். சலீம் (சர்கி) மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் விசேடமாக சாய்ந்தமருது பிரதேச 17 பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தர்களும் , நிர்வாக கிராம நிலதாரி எம்.எஸ்.எம். நளீம் அவர்களும் கலந்து கொண்டதுடன் சமாதான நீதவான்களின் பிரிவு வாரியாக சமாதான நீதவான்களின் விபரங்கள் கொண்ட மலர் வழங்கப்பட்டது.
இப்தார் விசேட பயான் உரையை அஷ்ஷேக் மௌலவி ஏ.எம்.ஏ. ஜப்பார் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வில் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.