கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை மரக்கூட்டுத்தாபனம் அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் இடையூறு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை

கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் ஆபத்தில் உள்ள மரக்கிளைகளை மரக்கூட்டுத்தாபனம் வெட்டியிருந்தது. குறித்த மரக்கிளை வெட்டிய நிலையில் அவற்றை அகற்றாமல் ஒரு மாதம் காலம் வரை வளாகத்திலேயே காணப்படுகின்ற நிலையில் 1200ற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற பாடசாலையில் மாணவர்களுக்கு இடையூறாக வெட்டிய மரக்கிளைகள் காணப்படுவதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.க.பொ.த சாதாரண தரப்பரீட்சையும் நடைபெறவுள்ள நிலையில் உடனடியாக அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இது தொடர்பாக பாடசாலையின் முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டபோது மரக்கூட்டுத்தாபனம் பாடசாலை மரத்தின் கிளைகள் மற்றும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த போது சில மரங்களை பாடசாலை பழைய மாணவர்கள் வெட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்தமையால் சில மரங்களை வெட்டியகற்றுவதை நிறுத்துமாறு கோரியபோது ஏற்கனவே வெட்டப்பட்ட கிளைகளையும் அகற்றாமல் சென்று விட்டார்கள் .இது தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்