வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அடிப்படை சம்பளத்தில் 1/160 ஆக வழங்கப்படும் மேலதிக நேர கொடுப்பனவை 1/200 ஆக குறைத்தல், பொது விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் வார ஓய்வு நாட்களில் வழங்கப்படும் 1/20 கொடுப்பனவை அடிப்படை சம்பளத்தின் படி 1/30 ஆக குறைத்தல், பதவி உயர்வு முறையை குறைத்தல் போன்ற அடிப்படைகளில் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர் போராட்டங்களுடன் கறுப்புப் பட்டை சேவைப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும் என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.