வெல்லாவெளி வைக்கல பிரதான வீதியின் பாலத்தினை உடைத்து விபத்துக்குள்ளான கார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இன்றைய தினம் பி.ப 5.45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்தவர்கள் காயங்களுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு வெல்லாவெளி பொலிஸ் : 0652056304
