மஹிந்த அமரவீர தனது அலுவலகத்தையும், பயன்படுத்திய வாகனத்தையும் கையளித்தார்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் திருப்பி கையளித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு சகலவிதமான ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் அவர் அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சின் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கிய ஊழியர்களுக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நன்றி தெரிவித்தார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *