15 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மோசடிகளுடன் தொடர்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்லாமல் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை எனவும் அவர்களில் சிலர் கட்சி அலுவலகத்தை கூட திறக்கவில்லை எனவும் அந்த அதிகாரி கூறினார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *