“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர். எனவே, சவாலை அவர் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
2022 மே 9, மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார். அமைச்சர்களும் பதவி விலகினர். மாற்று பிரதமரே அந்த சவாலை ஏற்றிருக்க வேண்டும்.
அரசாங்கம் கவிழக்கூடும் என சிலர் ஒரு வாரத்துக்கு முன்னர் சுட்டிக்காட்டினார்கள்.
மஹிந்த ராஜபக்ச பதவி விலகினால் முதல் சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சித் தலைவருக்கே வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்தன. எனக்கு அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை, சவாலை ஏற்பவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவித்தேன்.
மே 10, பொறுப்பேற்க அழைத்தபோது எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை. ஆட்சியைப் பொறுப்பேற்பதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டனர்.
நெருக்கடியான நேரத்தில் நாட்டுக்காக அவர்கள் தமது கடப்பாட்டை நிறைவேற்றவில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவர்கள் சவாலை ஏற்க முன்வரவில்லை. ஜே.வி.பியினரும் முயற்சி எடுக்கவில்லை. அதன்பிறகே என்னை அழைத்தனர்.
யார் ஜனாதிபதி என்பது எனக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையே இருந்தது. அதேபோல நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது!” -ரணில் விக்ரமசிங்க- Ranil Wickremesinghe