2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் (78) நேற்றிரவு (22) காலமானார்.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
யாழ் மாவட்ட முன்னால் முஸ்லீம் காங்கரஸ் பாராளுமன்ற உறுப்பினரான இவர், இம்முறை 2024 ஜனாதிபதி வேட்பாளரும் ஆவார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.