இழப்பீடு பெற்ற 43 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள்; 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடு.

வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்கள் எனத் தெரிவித்து 92 அரசியல்வாதிகள், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளது அம்பலமாகி உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

2022 ஆம் ஆண்டு அரகலய காலப்பகுதியில் தீ வைப்பால் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் 92 பேர், 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளதாக இன்று வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஹொரணை கோனபொல பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.

2022 அரகலய காலப்பகுதியில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற தீ வைப்பு சம்பங்களால் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையின்படி, 43 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *