நூருல் ஹூதா உமர்
கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான “Mindfulness” நினைவாற்றல் வாண்மை விருத்திச் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு வளவாளராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் யூ.எஸ்.சபீல் கலந்து கொண்டார்.
பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஜெம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்தரங்கில் பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து பயன் பெற்றனர்.