நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட உயர் தர கலைப்பிரிவு மாணவர்கள் 2024 ல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர். வரலாற்றில் முதல் தடவையாக இந்த பாடசாலையில் இருந்து தோற்றிய இம்மாணவர்களில் இருவர் பல்கலைக்கழகம் தெரிவாவாவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அவர்களில் ஏ.ஏர். சாக்கிரா பானு எனும் மாணவி 3A சித்திகளை பெற்றுள்ளதுடன் ஏ. பாத்திமா தூபா எனும் மாணவி 2A,B சித்தியைப் பெற்று இந்த வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். ஏனைய மாணவர்கள் 3 பாடங்களிலும் திறமைச்சித்தி க்கு மேல் பெற்றுள்ளதுடன் பாடசாலையின் சித்தி வீதம் 84% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சாதனையை புரிந்த இம்மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்ளையும் வழிநடாத்திய பகுதித் தலைவர், உதவி பகுதித் தலைவர், அதிபர், பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர்கள் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (28) பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பாடசாலையின் முன்னாள் அதிபருன் உயர்தர பிரிவின் ஸ்தாபக அதிபருமான எம்.ஐ.எம். சைபுத்தீன், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சாதனை படைத்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் பெற்றோர்களும் இதில் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பகுதித் தலைவராகவும் வகுப்பாசிரியராக வும் அரசியல் விஞ்ஞான ஆசிரியராகவும் செயற்பட்ட உயர்தர பிரிவு பகுதித் தலைவர் யூ.கே.எம். முபாறக் அவர்களுக்கான விசேட கௌரவமும் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கற்பித்த ஆசிரியர்களும் வழிகாட்டிய வகுப்பாசிரியர் திருமதி. சிரூனா பழீல் பிரதி மற்றும் உதவி அதிபர் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ், உதவி அதிபர்களான ஏ. எம். பாஹிம் மற்றும் எம்.பி.எம். பௌசான், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.