சர்ச்சைக்குரிய நோய் எதிர்ப்பு தடுப்பூசி பற்றிய வெளிப்படுத்தல்.

dvfgcvbzdfrfd

சர்ச்சைக்குரிய நோய் எதிர்ப்பு தடுப்பூசியை இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்ததாக அந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் கூறியிருந்தாலும், தங்களது நிறுவனம் அதைத் தயாரிக்கவில்லை என்று குறித்த இந்திய நிறுவனம் அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (21) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மற்றும் ரிட்டோக்ஸிமேப் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, முதல் சந்தேகநபரான சுதத் ஜனக பெர்னாண்டோவின் மகன் Ospelts Life Science Productions GMBH pvt ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், இந்த நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளுக்குத் தேவையான குப்பிகளை அந்த நிறுவனம் இலங்கைக்கு இறக்குமதி செய்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் முதலாவது சந்தேகநபர், மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கிய சந்தேகத்திற்கிடமான கரைசலை இறக்குமதி செய்ததாக குறித்த பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த இந்திய நிறுவனத்திற்கு இந்த கரைசலின் மாதிரியின் ஒரு பகுதியை அனுப்பி ஆய்வு செய்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சாட்சியத்தின்படி, குறித்த கரைசல் அவர்களின் பெயரைக் கொண்டிருந்தாலும், முதலாவது சந்தேக நபருடன் எந்த வகையான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை எனவும், இந்த கரைசல் தங்களது நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், வழக்கின் முதல் சந்தேகநபரான சுதத் ஜனக பெர்னாண்டோவை மார்ச் 5 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவரது மகன் ஹேவகே கிஹான் மதுசங்கவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *