வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு தேர்தலை நடத்துங்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை.

fghj

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ​ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது. பிரச்சினையான சூழ்நிலை காரணமாக பழைய வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டு, புதிய வேட்புமனு கோரப்பட வேண்டும் என்று அனைவரும் முன்வந்து இதனை ஆதரித்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 66 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. 25 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பிறகு, குழு நிலை விவாதம் நடக்கும். சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்காலப்பிரில் சட்டவாக்கப் பணிகளைச் செய்ய உறுதிபூண்டுள்ளனர். சபையில் மட்டுமன்றி பல்வேறு குழுக்களும் காணப்படுகின்றன. இந்த வரவு செலவுத் திட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டவாக்க நடைமுறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி, மார்ச் 21 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்தார். இதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு குழுக்களும் தேர்தலை ஒத்திவைக்க கோரியும் வருகின்றன, பாராளுமன்ற நடைமுறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். புதிதாக பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள் இதனை பெரியதொரு விடயமாக பார்க்காமல் இருக்கலாம், பாராளுமன்ற நடைமுறை தெரியாவிட்டால் புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனவே வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் இந்தத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆளுந்தரப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவை தமது கைப்பாவையாகக் கருதுகின்றனர். தேர்தலை நடத்த வேண்டிய திகதிகள் மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதிகளை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது. ஆளுந்தரப்பினர் இவற்றை குழப்பிக்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *