ஊடக ஆளுமை விக்டர் ஐவன் இன்று காலமானார்.

விக்டர் ஐவன் இலங்கையில் தோன்றிய “ஊடக ஆளுமை” களின் பட்டியலில் முக்கியமானவர்.

நடுநிலைப் பார்வையில் எந்த விதத்திலும் சமரசமற்ற “ராவய ” வின் மூளையாகவும் இதயமாகவும் செயற்பட்டவர்.

“பொடி அதுல” என்று அழைக்கப்பட்ட விக்டர் ஐவன் “சேகுவாரா குழப்பம்” என்றழைக்கப்பட்ட 1971 இளைஞர் எழுச்சியின் போது கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து பின்னர் மகாத்மா காந்தியின் காந்தீயத்தையும் சேர் பேர்ட்ரண்ட் ரஸலின் தர்க்கவியலையும் தனது மெய்யியல் தத்துவமாக ஏற்று வழிநடந்தவர்.

1987/1988 கலவர காலத்தில் எதுவிதமான பயமும் இன்றி அரசு மற்றும் ஜேவிபி /தேஷபிரேமி ஜனதா வியாபாரய என்று எல்லோரையும் விமர்சனம் செய்தவர்.

1994 சந்திரிக்கா மீள் வருகையை ஆதரித்த போதும் இறுதியில் சந்திரிக்கா அநுருத்த ரத்வத்தையால் புத்தி பேதலித்து மோசமான ஆட்சியாளராக செயற்பட்டதை தனது “சௌர ரெஜின” நூல் மூலம் வெளிக்கொண்டு வந்தவர்.

மஹிந்தவின் ஊழல்கள் மற்றும் சரத் என் சில்வாவின் நீதி துஷ்பிரயோகம் என்று முக்கியமான விடயங்களை வெளிக் கொண்டு வந்தவர்.

இலங்கையில் அரசியல் சமூக கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய சாதி வகுப்பு ஆதிக்க சக்திகளை அச்சமின்றி அடையாளம் காட்டியவர் விக்டர் ஐவன்.

தனது 75 ஆவது வயதில் காலமான விக்டர் ஐவனின் இழப்பு இலங்கை ஊடக வெளியில் ஈடு செய்ய முடியாதது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *