இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அமைச்சு அதிகாரிகள் வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த அமைச்சு வளாகத்திலும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திலும் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
புதிய ஆட்சியின் பின்னர் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வாகனங்களை என்ன செய்வார், எதிர்காலத்தில் அவை எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.