இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி. சர்வதேச சந்தையில் இலங்கை பின்னடைவு.

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நாணயங்களில் 23 நாணயங்கள் இதுவரை வலுவடைந்துள்ளன.

ரஷ்ய ரூபிள் முதலிடம் பிடித்துள்ளது, ஹங்கேரியன் ஃபோரின்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இலங்கை ரூபாயுடன் சேர்த்து மொத்தம் ஏழு நாணயங்கள் இந்த ஆண்டில் இதுவரை மதிப்பை இழந்துள்ளன.

இறக்குமதி தேவைகள் அதிகரித்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவினால் வர்த்தகச் சுழற்சி விரிவாகி, இந்த நிலை ஏற்பட்டுள்ளது

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *