இஸ்ரேல் – எகிப்து எல்லைக்கு அருகே, மவுண்ட் ஹரிஃப் பகுதியில், எகிப்திய காட்டுப் பூனைகள் பல இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இதனால் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்கள் ஏற்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த விலங்கு எவ்வாறு எல்லையைக் கடந்து தாக்குதலைத் தொடங்கியது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரபு ஆட்சியாளர்களை விட, இந்த எகிப்திய பூனைகளிடம் ஆண்மை நிறைந்துள்ளது என சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
எகிப்திற்கும் – இஸ்ரேலிற்கும் எல்லைப்பகுதியான மௌன்ட் ஹரீப் பகுதியில் கடைமையிலிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களை திடிரென வந்த Lynx எனப்படும் ஒரு வகை காட்டுப்பூனை ஒன்று ஆக்ரோஷமாக தாக்கியதில் பல இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பொதுவாக இந்த விலங்குகள் மனிதர்களை தாக்குவதில்லை என்றும் நேற்றைய நிகழ்வு அரிதானதும் ஆச்சரியமானதுமான ஒன்று என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பிடிக்கப்பட்ட இவ்விலங்கு வனஜீவராசிகள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“நபியே! யானை(ப்படைக்)காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும் அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறுகற்களை அவர்கள் மீது அவை எரிந்தன.அதனால் அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலை போல் அவன் ஆக்கிவிட்டான்”