December 5, 2024
Home » News » யார் இந்த நபாயிஸ்? இளங்கலை விருதுக்கு தெரிவு.
WhatsApp Image 2024-11-06 at 21.12.27_3cc424e2

2024 கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டார் KTV இன் மருதமுனை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ்.

கைத்தறியும் கடல் வளமும், கல்வியாளர்களும் இலக்கியமும் எழுத்தும், கலையும் என பல்துறையில் அழகு சேர்க்கும் அழகிய கிராமமான மருதமுனை எனும் கிராமத்தில் உள்ள எஸ்.எம் வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் றகுமான் அப்துல் றாசிக் ஆதம்பாவா ஹயறுன்நிஷா தம்பதிகளின் மூத்த புதல்வரான ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான நபாயிஸ் என அறியப்படும் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் ஒரு பட்டதாரியாவார்.

இவர் தனது ஆரம்ப மற்றும் உயர் தரக் கல்வியினை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் பெற்றதோடு தனது தொழில்வாண்மையான உயர் கல்வியினை (2005/2006) ஆம் ஆண்டு கொழும்பு சமூக சேவைக் கல்லூரியில் சமூகப்பணி உயர் டிப்ளோமாவையும் (2017/2018) ஆம் ஆண்டு அதே கல்லூரியில் சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

2015ஆம் ஆண்டு இந்தியா காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுமானி கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ள இவர் கொழும்பு மாஸ் மீடியா நிறுவனத்தில் ஊடகவியல் மற்றும் ஒளிபரப்புத் துறை தொடர்பான டிப்ளோமாக்களையும் கொழும்பு மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமை தொடர்பான டிப்ளோமா, கிழக்கு பல்கலைக்கழகத்தில் அனர்த்த முகாமைத்துவ சான்றிதழ், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்களும் சமாதானத்தை கட்டி எழுப்புதல் தொடர்பான டிப்ளோமா, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் அபிவிருத்தி பணியில் டிப்ளோமா பூர்த்தி செய்துள்ள இவர் சமூக தொழில்நுட்ப கற்கைகள் நிறுவனத்தில் அனர்த்த முகாமைத்துவ டிப்ளோமா மற்றும் அலுவலக முறை தொடர்பான டிப்ளோமா என பல டிப்ளோமா பாட நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

தனது ஆரம்ப காலம் முதல் சமூக சேவையில் ஆர்வம் மிக்கவராக இருந்து வந்ததினால் இன்றும் பல சமூக சேவைகளை முன் நின்று செய்து வருவது இவரின் சிறப்பு இயல்பாக நோக்கப்படுகிறது. கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் பல்வேறு சமூக முன்னேற்ற அமைப்புக்களில் ஸ்தாபராகவும் உயர்பீட உறுப்பினராகவும் நிர்வாகியாகவும் அங்கத்தவராகவும் பல்வேறு அமைப்புகளில் இணைந்து சேவையாற்றி வரும் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ஊடகப் பணியில் இணைந்து தன்னை ஒரு ஊடகவியலாளராகவும் சமூகப்பணியாளராகவும் அடையாளப்படுத்தியதுடன் 2009ஆம் ஆண்டு அகில இலங்கை சமாதான நீதவனாகவும் சத்தியப்பிரமாணம் செய்து மக்கள் பணி செய்து வருகின்றார்.

முதுமாணிப் பட்டதாரியான இவர் அரச தொழிலில் 12 வருடகாலமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களில் அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றியதுடன் தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தராவும் கடமையாற்றி வருகின்றார்.

தனது அரச தொழிலுக்கு முன்னர் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் சேவையாற்றிய நூலாசிரியர் பலரது நன்மதிப்பைப் பெற்றதுடன் அவரது சமூக சேவைக்காகவும் ஊடக செயற்பாட்டிற்காகவும் பல்வேறு அமைப்புக்கள் அவருக்கு சாமஸ்ரீ, தேச கீர்த்தி, ரத்னதீப, தேச அபிமானி, கீர்த்தி ஸ்ரீ மற்றும் சமூக சாகரம் போன்ற பட்டங்களையும் வழங்கி கௌரவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினராகவும் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் உறுப்பினராகவும் இருந்து சேவையாற்றி வரும் இவர்
கெபிட்டல் தொலைக்காட்சியின் கல்முனைப் பிராந்திய செய்தியாளராகவும் தினகரன் பத்திரிகையின் மருதமுனை விஷேட நிருபராகவும் தமிழன் பத்திரிகையின் மருதமுனை நிருபராகவும் ஊடகப்பணியாற்றி வருகிறார்.

1982 மே மாதம் 26ஆம் தேதி மருதமுனையில் பிறந்த றாசிக் நபாயிஸ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் தேசிய பத்திரிகைகளுக்கு கவிதைகள் எழுதியதனூடாக எழுத்துலகில் கால் பதித்தார். இலங்கை தேசத்தில் அதிகமான முன்னணி இலக்கிய வித்தகர்களையும் ஆளுமைகளையும் கொண்ட கிழக்கில் இவரது எழுத்துக்களும் அன்றைய நாட்களில் தனக்கான இடத்தை பிடிக்கத் தவறவில்லை.

அதன் வெளிப்பாடாக பாடசாலை மாணவனாக இருந்த றாசிக் நபாயிஸ் 2000ஆம் ஆண்டு உயர்தரம் கற்கும் போதே பொது அறிவுத் தொகுப்பு எனும் நூலை வெளியிட்டு தன்னை நூல் ஆசிரியர்கள் பட்டியலில் இணைத்து கொண்டார்.

அதுமட்டுமின்றி யூரோ நாணயம் அறிமுகம் உலகை வந்தடைந்த போது “யூரோ நாணய அறிமுகத் தொகுப்பு” எனும் நூலையும் 2001ஆம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் வெளியிட்டு ஆசிரியர்கள், மாணவர்களின் நன்மதிப்பையும் பெற்றார்.

அப்போதொல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்த மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த மர்ஹூம் ஏ.எம்.ஏ சமது நினைவுபடுத்தப்பட வேண்டியவர்.

நபாயிஸின் தந்தை ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் றகுமான் அப்துல் றாசிக்
தனது மகனை வாசிகசாலையின் பக்கம் நாட்டம்கொள்ள அறிவுறுத்தியமையும் அப்போதைய ஊடக கலாசாரத்தின் மீது அவர் கொண்ட அதீத தீவிரத் தன்னையையும் கண்டுகொண்ட அவருடைய தந்தையார் 2007ஆம் ஆண்டு தந்தையின் வழிகாட்டலுடன் ஊடகத்துறைக்குள் பகுதி அளவில் நுழைந்தார்.

றாசிக் நபாயிஸ் மருதமுனை பிரதேசம் அடங்களாக பல்வேறு பிரதேசங்களின் பொதுப் பிரச்சினைகள், சம்பவங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் நிகழ்வுகள் என தனது எழுத்துக்களினால் உயிர் கொடுத்து 17 ஆண்டுகள் போட்டி, பொறாமை, கழுத்தறுப்புகள் கடந்து இன்று வெற்றிகரமான ஊடகவியலாளராகவும்
எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

தனது 17 வருட கால ஊடகப்பணியில் பயணிக்கும் றாசிக் நபாயிஸ் இதுவரையும்
70 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தேசிய பத்திரிகைகளில் எழுதியதோடு அதில் 23 சமூகம் சார் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து 2022ஆம் ஆண்டு “ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி” எனும் கட்டுரை தொகுப்பு நூல் ஒன்றையும் 2023ஆம் ஆண்டு மருதமுனையில் உள்ள சமாதான நீதிபதிகள் பலரை ஒன்று திரட்டி அவருடைய தகவல்களை தொகுத்து “மருதமுனை சமாதான நீதிபதிகள்” எனும் நூலையும் மருதமுனை ஆவணக்காப்பகத்தின் வெளியீடாக தனது பிறந்த மண்ணில் வெளியிட்டு வைத்தார்.

“மருத நியூஸ்” நிறுவன ஸ்தாபராகவும் “மருதமுனை ஆவணக்காப்பகம்” நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் இருந்து செயற்படும் றாசிக் நபாயிஸ் எழுத்தின் மீது தீரா காதல் கொண்ட ஒருவராக இருக்கின்றார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். அரச பணியாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என்பதையெல்லாம் கடந்து தான் ஒரு சமூக சேவையாளர் என்பதை றாசிக் நபாயிஸ் எப்பொழுதும் முன்னிறுத்த தவறுவதில்லை அதன் வெளிப்பாடாக பல அரச சார்பற்ற நிறுவனங்களில் சுமார் பத்து வருடங்கள் கடமையாற்றி பல சமூக சேவை திட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு உதவிகள் செய்தார்.

அரச பணியாளராக 2012 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனராக இணைக்கப்பட்ட றாசிக் நபாயிஸ் ஒரு வருடத்தின் பின்னர் அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர நியமனம் பெற்று கல்முனையில் பிரதேச செயலகத்தில் 09 வருடங்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி மாறுதல் பெற்று சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒரு மாத காலங்கள் சேவை செய்து பின்னர் கல்முனை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டு மீண்டும் 2022 ஆம் ஆண்டு நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு இரண்டு வருடங்கள் கடமையாற்றிய நிலையில் மீண்டும் கல்முனை பிரதேச செயலகத்திற்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகராக இணைக்கப்பட்டு கடமையாக்கி கொண்டிருக்கிறார்.

பல முக்கிய அமைப்புகள் பலதினதும் கௌரவங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற றாசிக் நபாயிஸ் பிரதேச மக்களினால் நன்றாக அறியப்பட்ட ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் சமூக சேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றார்.

நவமணி, தமிழ்த்தந்தி, மெட்ரோ நியூஸ், தமிழ் மிரர் மற்றும் விடிவெள்ளி அடங்களாக பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வந்த றாசிக் நபாயிஸ் தமிழன் பத்திரிகையின் மருதமுனை நிருபராகவும் தினகரன் பத்திரிகையின் மருதமுனை விஷேட நிருபராகவும் பல செய்திகளை, கட்டுரைகளை எழுதிவரும் இவர் இதுவரையும் பொது அறிவுத் அறிமுகத் தொகுப்பு, யூரோ நாணய அறிமுகத் தொகுப்பு, ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி, மருதமுனை சமாதான நீதிபதிகள், அழைப்போம் பயன்பெறுவோம் எனும் 05 நூல்களைத் தந்த இவர் தனது ஆறாவது நூலான “அனர்த்தங்களும் நாமும்” எனும் நூலை 2024/10/19ஆம் திகதி எழுத்துலகிற்கு தந்தார்.

அதே தினத்தன்று ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடாத்திய துறைசார்ந்தோர் கெளரவிப்பு நிகழ்வில் ஊடக மற்றும் எழுத்து துறைக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டு அலுவலர்கள் திணைக்களத்தினால்
2024ஆம் ஆண்டுக்கான இளங்கலைஞர் – ஊடகத்துறைக்கான விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் KTV இன் ஊடகவியலாளராக மருதமுனை இருந்து கடமையாற்றி வரும் இவர் இன்னும் பல விருதுகளையும் உயர் சாதனைகளையும் பெற வேண்டும் என வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *