November 21, 2024
Home » News » குளவி தாக்குதலால் 100 மாணவர்கள் வைத்தியசாலையில்.
1725005823-bambara-2

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

70 மாணவர்கள் தற்போது ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனைய மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் உள்ள மரத்தில் இருந்த குளவிகளே இவ்வாறு கொட்டியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பாடசாலையின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அப்போது பாடசாலையில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக மாணவர்களை பாதுகாப்பான வகுப்பறைகள், அதிபர் அறை, கணினிப் பிரிவுக்கு அனுப்பிவிட்டு குளவிகளை விரட்டுவதற்காக வெளியில் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *