கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது
குறித்த நிகழ்வு மாற்று வலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி(VAROD) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
VAROD நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் அருட்பணி வின்சன்ட் டிபோல் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நலாஜினி அவர்கள் கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
Diakonia நிறுவனத்தின் அனுசரணையுடன் VAROD நிறுவனத்தின் “மரபுசார் உணவினை மீட்டெடுப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டத்தின் கீழ் குறித்த நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய விற்பனை கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளை உள்ளடக்கியதாக கைந்நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் Dr.தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் Drஅ.அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்,VAROD நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.