October 30, 2024

News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.