October 4, 2024
1723606270-tobeccoleaves-2

புத்தளம் – கற்பிட்டி வடக்கு எல்லைப்பகுதியின் குதிரமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய படகு ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் விஷேட ரோந்து கப்பலில் கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய இயந்திர படகுக ஒன்றினை சோதனைக்குற்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த இயந்திர படகுகில் 80 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 2,689 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், பீடி இலைகள் அடங்கிய உர மூடைகளுடன் குறித்த இயந்திர படகில் இருந்த மூன்று இந்தியர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பீடி இலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திர படகும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 2689 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 80 உரமூடைகளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவருடன், இயந்திர படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வரும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 37,619 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பெயரில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *