October 3, 2024
1723540205-1723536429-elec_L

கடந்த 24 மணி நேரத்தில் 29 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 11 முறைப்பாடுகளுமாக சட்ட மீறல்கள் தொடர்பாக 26 முறைப்பாடுகளும், மேலும் 03 முறைப்பாடுகளும் என மொத்தம் 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மொத்தம் 366 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை தொடர்பாக 10 முறைப்பாடுகளும் விதி மீறல்கள் தொடர்பாக 355 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *