October 3, 2024
1723555679-1723554683-650x433

தனமல்வில பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவல்களை அறிந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த காதலன் மாணவியை ஏமாற்றி தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு முதல் முறையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த மேலும் சில மாணவர்கள் மாணவிக்கு மதுவை குடிக்க வற்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடியோவை காட்டி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 17 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிரிந்தி ஓயாவிற்கு அருகில், 7 மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதாகவும், மாணவியின் தாயார் பாடசாலை ஆசிரியை என்பதும் தெரியவந்துள்ளது.

தனக்கு நடந்த இந்த கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர்களான 17 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் நேற்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகத்திற்குரிய 17 மாணவர்களில் 14 பேரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *