October 3, 2024
PHOTO-2024-08-12-23-49-38

ரஹ்மத் மன்சூரின் அலுவலகத்தில் ரவூப் ஹக்கீம் உறுப்பினர்களுடனான சினேகபூர்வ சந்திப்பு…!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,கட்சியின் பொருளாலருமான ரஹ்மத் மன்சூரின் கல்முனையில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் வைத்து முன்னாள் கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வர் காத்தமுத்து கணேஷ் மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.செலஸ்றினா,என்.நந்தினி,ரீ.சுமித்ரா ஆகியோர் மற்றும் ஆர்.ப்ரகாஷ்,கே.நிறோஷன் ஆகியோரை இன்று (12)சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது,கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர்,முன்னாள் மாகாணசபை அமைச்சரும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,கட்சியின் சர்வதேச விவகார
பணிப்பாளரும்,முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான சிறாஸ் மீராஸாஹிப்,கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுச் செயலாளர் ஏ.சீ.சமால்தீன்,கட்சிப்போராளிகள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன் போது ரஹ்மத் மன்சூரின் தயா ரும்,முன்னாள் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர்.மன்சூரின் பாரியார் சுஹாறா மன்சூர் அவர்களையும் ரவூப் ஹக்கீம் சந்தித்து நலன் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *