October 8, 2024
FB_IMG_1727162563371

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படவில்லை என அவர் அங்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *