October 6, 2024
17255523501-743x445

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது.

இவ் வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்

படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *