October 8, 2024
1724995584-bus-excident-2

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று (30) அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

பஸ்ஸின் அதிவேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பஸ் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் முன் இடது பகுதி சேதமடைந்துள்ளது.

பஸ் பாலத்தில் மோதியவுடன், பஸ்ஸில் இருந்த 5 பயணிகளும் ஆற்றில் விழுந்ததுடன், பொதுமக்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *