October 2, 2024

– பஹ்மி முகமட்

உலகவரலாற்றில் 69 இலட்ச வாக்கினால் தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பியது மாற்றம் மட்டுமல்ல சரித்திரமும் தான்!!

ஆனாலும் அந்த அறகலயை தலமை தாங்கியவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர மக்கள் மத்தியில் 7 வது இடத்தில் உள்ளார்.

2019 தேர்தலில் 55 இலட்சம் வாக்குடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சஜித்தைவிட 4 இலட்சம் வாக்குகளை பெற்ற அநுரவால் ஜனாதிபதியாக குறைந்த பட்சம் 60 இலட்சம் வாக்கு எடுப்பது என்றால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து ரணில் மற்றும் நாமல் போன்றவர்கள் வாபஸ் பெறவேண்டும்.!

சிலர் 2019ல் கோதபயா திடீரென்று 69 இலட்சம் வாக்குகளை பெற்றதை காரணம்காட்டி! அநுரவால் 60 இலட்சம் பெறமுடியும் என குருட்டுத்தனமாக வாதிடுகின்றனர். 2019ல் கோதபயா தேர்தலில் இறங்கும் போது மஹிந்த உற்பட SLFPன் 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் உற்பட் UNP மற்றும் இதர கட்சிகளின் இன்னால் / முன்னால் 38 பாராளுமன்ற மற்றும் 212 மாகாண/ உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் SLPPஆக இணைந்தனர்.வெற்றி கண்டனர்.

ஆகவே கூட்டம் கூட்டி,காதுக்கு இதமான கருத்து கூறுபவர்கள் நாட்டை வழிநடாத்த முடியாது.அப்படியானால் அறகலய தலைவரை தேர்தல் இன்றி ஜனாதிபதியாக்கலாம்.
சிங்கள இனவாத்த்தையும் , கட்சியை உருவாக்கிய ரோகன விஜயவீரவையும் 2010 தேர்தலுடன் மூட்டை கட்டிவைத்து, புதிய முகமூடியுடன் வந்துள்ளனர்.

1983ம் ஆண்டு இனக்கலவரம் தொடங்கி , 30 வருடங்களாக வடகிழக்கில் தமிழ் ஆயுதபோராளிகளின் அட்டூளியம், வடமாகண முஸ்லீம்களது இனசுத்திகரிப்பு என்று தொடர்ந்து 2010ல் ஹலால் பிரச்சனை உடன் பயணித்து ஏப்ரல் தாக்குதலுடன் முடிவடைந்த இந்தநாட்டு் முஸ்லீம்களுக்கு எதிரான எந்த செயற்பாட்டிலும் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய எந்த பங்களிப்பும் இல்லை.மாறாக இன்று தேர்தல் மேடைகளில் ஹகீமையும்,றிசாத்தையும் குறைகூறுவது மக்களிடம் எடுபட மாட்டாது.

2002 சந்திரிக்கா ஆட்சியில் தொடங்கி ரணில்,மஹிந்த மற்றும் மைதிரி ஆட்சியில் இனப் பிரச்சனைக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்சிருத்தம் தொடர்பில் பல அறிக்கைகள் வெளியானது.இதில் JVP சிறுபான்மை நலன் தொடர்பில் ஒருவரி கூட முன்வைக்கவில்லை.

வடகிழக்கு முஸ்லீம்கள் வெள்ளம்,சுனாமி,கொரோனா மற்றும் பல்வேறு அனர்த்தங்களை எதிர்கொண்ட போது,,எத்தனையோ முகம்தெரியாத மற்றும் முகவரி இல்லாத நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டினர்.அநுர எங்கு இருந்தீர்கள்??
உலகை முதலாளித்துவமும் , ஜனநாயக சித்தாந்தமுமே ஆழ்கிறது.

சோசலீஷசம் பேசிகின்ற ஓரிரு நாடுகள் ஏற்கனவே வல்லரசாக உள்ளது.வளர்ச்சி அடையாத பலநாடுகள் உயிரற்ற கமியூனிஷ கொள்கைகளை குழிதோண்டி புதைத்து வருகிறது.ஆதலால் வீதியில் தினமும் போராட்டம் நடாத்தும் இந்த கொள்கை கட்சிகளால் கதிரையில் ஒருநாள் கூட அமர்ந்து நாட்டை ஆளமுடியாது.
தெற்கில் சிங்கள இனவாதம் மற்றும் இளைஞர்களது எழிர்ச்சியில் நடந்த 1982 தேர்தலில்

JVP தலைவரால் 4.19%(273428) வாக்குகளையே எடுக்க முடிந்தது. இந்த வாக்குவீதம் 2019ல் 3.16%( 418553) எனக் குறைந்தது. 37 வருடகாலமாக மக்களிடம் உங்கள் கொள்கையை முன்வைக்க முடியவில்லை.

பலஸ்தீனம் மற்றும் விநட்னாம் முஸ்ஙீம்களுக்காக கொழும்பில் பல ஆர்ப்பாடமும்,கண்டனக் கூட்டங்களும் நடந்தது. அதில் உங்கள் கட்சி என்ன வகிபாகம் செய்தது.

2004ம் ஆண்டு அரசாங்கத்தி்ல் பங்காளராக அமைச்சுப் பதவிகளை பெற்று 23 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இருந்தீர்கள். இன்று நீங்கள் கூறும் குடும்ப ஆட்சி, ஊழல நிர்வாகம் அன்றும் இருந்தது.அதன் பங்காளி நீங்களுமே என்பதை மறந்துவிட வேண்டாம்.

2004 இந்த நாட்டில் உங்களால் நிர்வகித்த அரசாங்கத்தால் நாட்டுக்கு நீங்கள் செய்த வரலாற்று விடயம் ஒன்றைக் கூறுங்கள். விடுதலை புலிகளுடனான சமாதான நகர்வுகளுக்கு சிங்கள இனவாத்சக்திகளுடன் சேர்ந்து எதிராகவும்? முஸ்லீம் காங்கிரஸ் அரசியலை நசுக்குவதிலும் காலத்தை வீண்டித்தீர்கள். அதன் பயனாக 3 பாராளுமன்ற உறுப்பினராக வீழ்ச்சி கண்டுள்ளீர்கள்.

உங்கள் கட்சியின் வரலாறு ,பின்புலம் மற்றும் கொள்கை புரியாத 2000ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த, தற்கால இளைஞர்கள் உங்கள் கதைக்கு சிலநேரம் கைதட்டலாம்.
“20 வயதை அடைந்த இளைஞன் கம்யூனிஷம் (JVP)படிக்க வேண்டும்,இல்லாவிட்டால் அவனால் பூரணமடைய முடியாது. 30 வயதுக்குப் பின்னர் அதே கொள்கையை பின்தொடர்ந்தால் அவனால் சாதிக்க முடியாது”

எனது எழுத்தாற்றல் மற்றும் அரசியல் ஆய்வுகளை பல்கலைக்கழக காலத்தில் வாசித்த ஆயிரம் கமியூனிஷ பத்தகங்கள் மற்றும் பங்குபற்றிய கூட்டங்கள் மூலம் கூர்மையாக்கினேன்.

தற்போது அநுரவின் கொள்கை மற்றும் செயற்பாடுகளில் பாரிய மாற்றம் உள்ளது.இது நுச்சயம் இந்த தேர்தலில் நல்ல அறுவடையை வழங்கும்.ஆனால் இந்தக்கட்சி நாட்டை ஆட்சிசெய்ய மக்கள் மனங்களை வெற்றி கொள்ள நீண்டதூர பயணம் செய்ய வேண்டும்.

பஹ்மி முகமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *