October 4, 2024
istockphoto-683425426-612x612

Blur background interior design, scandinavian white minimalistic bedroom, hotel spa resort

கொழும்பில் மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்
கடந்த 13 ஆம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் இணையம் ஊடாக பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரது அழைப்பின் பேரில் வர்த்தகர் ஹோட்டலொன்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த வர்த்தகர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது, தொடர்புகொண்ட பெண்ணுடன் வருகை தந்த மூவர் வர்த்தகரை மிரட்டி, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகள், மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதன் பெறுமதி சுமார் 32,225,000 ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *