February 21, 2024
KTV தமிழ்

Tag: போதைப்பொருள்

பிரதான செய்திகள்

மீண்டும் சுற்றிவளைப்பு ஆரம்பம்! 24 மணி நேரத்தில்,1422 பேர் கைது!

niasfasmir
நாடளாவிய ரீதியில் நீதி ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நேற்று (27) முதல் இன்று (28) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில்...
உள்ளுர் செய்திகள்

கிண்ணியா மாயாஜால வித்தைக்காரர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!

niasfasmir
திருகோணமலை -கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் அதிகமானோர் கைது?

niasfasmir
கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளை ஒழிப்பதற்கான இராணுவத்தினரால் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட...
உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம்; குழந்தை கடத்தல்

Shabeeb
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறுகுழந்தையொன்று கடத்தப்பட்ட செய்தியொன்று நீர்கொழும்பில் இருந்து பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற...
உள்நாடு

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்தை நிராகரித்த பள்ளிவாசல்!

Shabeeb
போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா...
நிகழ்வுகள்

போதைப் பொருளுக்கு பின்னால் மாபியா வலைப்பின்னல்

Shabeeb
– ஏ.எச்.ஏ. ஹுஸைன் மாவட்டத்திற்கு போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பது மாவட்ட நிருவாகத்திற்கு அப்பால்பட்ட  ஒரு மாபியா வலைப்பின்னலாக உள்ளது என மட்டக்களப்பு மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். பெண் குடும்பத் தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரையறைகளை உருவாக்குதல் எனும் ஆய்வின் கொள்கைச் சுருக்க வெளியீட்டு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். விழுது ஆற்றல்மேம்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு தனியார் விடுதியில் இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை 23.12.2022 இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிய, பெண்கள் சமாச செயற்பாட்டாளர்களின் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாற்றத்தை நோக்கி இளையோர் சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடியால் இளையோர் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள்,  பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களும் அதன் தாக்கங்களும், மலையகத்தில் மாணவர்களின் இடைவிலகல்,  முஸ்லிம் மக்கள் மத்தியிலான விவாகரத்தின் போக்குகளும் அதன் தாக்கங்களும் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள், பாதிப்பினால் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் அனைத்து மட்டங்களுக்குமான பரிந்துரைகள் ஆகியவை நிகழ்வில் பிரகடனங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய மாவட்ட மேலதிகச் செயலாளர் சுதர்ஷினி, அரசின் எந்தவொரு உதவித் திட்டத்திலும் முதலாவதாக உதவிகளைப் அபெறும் தரப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கான உரிமைகள் கொள்கைகள், சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் பல்வேறு கொள்கையாக்கங்கள் இங்கே வழங்கப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பில் 35 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றார்கள். இவர்களில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள்  பொருளாதார மேம்பாடு கண்டவர்களாக உள்ளார்கள். கல்வி ரீதியிலான முன்னேற்றங்களைக் கண்டவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நாம் காலங்காலமாக பெண்களையும் சிறுவர்களையும் இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்காளக அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம். எந்தவொரு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் பூச்சியத்தில் இல்லை என்று நிச்சயமாக நான் கூறுவேன். அவர்களை பூச்சிய நிலைமையிலிருந்து முன்னேற்றியதன் பங்களிப்பு அரச சார்பற்ற நிறுவனங்களையும் அரசின் சில கொள்கைகளையும் சாரும். பெண்களை பொருளாதார ரீதியாக தூக்கி விடுவதுதான் அவர்களை மீண்டெழுந்து சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கான ஒரே வழியாகும். அடுத்தது அவர்களை அரசில் தீர்மானங்களை எடுக்கின்ற அரசியல் பங்களிகளாக மாற்ற வேண்டும். ஒட்டு மொத்த சமூகத்திற்கே கேடு உண்டாக்கும் போதைப் பொருள் பாவனை, பெண்களை பாலியல் இலஞ்சத்திற்கு ஆளாக்குவது என்பவை வெறுமனே பெண்களுக்கான பிரச்சினைகளாக மட்டும் நோக்கக் கூடாது.இதற்கு அனைவரும் இணைந்து சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். நாங்கள் மாவட்ட நிருவாகம் போதைப் பொருள் ஒழிப்பிற்காக விளம்பரம் இல்லாமல் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் ஒட்டு மொத்த சமூகங்களும் இணைந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் ஊடுருவும் மார்க்கம், அதனைத் தடுத்து நிறுத்துவது நிருவாகத்திலுள்ள எங்களது கைகளுக்கு எட்டாத  ஒரு மாபியாவாகவே கருத வேண்டியுள்ளது” என்றார். இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பசீஹா அஸ்மி நிகழ்நிலை ஊடாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் பாத்திமா நஹீஜா, பதுளை மாவட்டம் சார்பில் பிரமேதா பெருமாள், பரசுராமன் சாந்தன், கே. தனப்பிரதீப், கே. ஜெயகௌரி, திருகோணமலை மாவட்டம் சார்பில் அபிவர்ணா வர்ணகுலசிங்கம், அம்பாறை மாவட்டம் சார்பில் ஷாஹிறா, ஏ.கே. பாத்திமா சஜிதா, ஏ.ஏ. நூறுல் ஹுஸ்னா, மட்டக்களப்பு சார்பில் விஜயலக்ஸ்மி இராமச்சந்திரன், தனுஜா வடிவேல் உள்ளிட்ட இன்னும் பலர் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றினர். விழுது நிறுவனத்தைச் சேர்ந்த சுகிர்தவிழி,  நிர்மலா உட்பட இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.
உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் – சுமார் ஒரு இலட்சம் பேர் கைது!

Shabeeb
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 45,801 பேர்...
நிகழ்வுகள்

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்.

Shabeeb
கிராம மட்ட அமைப்பினருக்கு, இளையோரை போதைப்பொருள் பாவனைக்கு அகப்படாமல் பாதுகாக்கும் யுத்திகள் தொடர்பிலும் பால்நிலை வன்முறையற்ற சமத்துவமான சந்தோசமான குடும்ப...
உள்நாடு

போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான ஊடக சந்திப்பு

Shabeeb
இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல தரப்பினரும் பல்வேறு நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர் என...
உள்நாடு

திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த 30 க்கும் அதிகமான பொலிஸார்!

Shabeeb
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....
KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி