February 21, 2024
KTV தமிழ்

Tag: நிகழ்வு

நிகழ்வுகள்

யாழ்.. மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு!

Shabeeb
யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 நபர்களிற்கு பதிவாளர்...
உள்நாடு

கடலட்டை அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு

Shabeeb
83 கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த...
கல்வி

வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு

Shabeeb
சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வடமாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளவதற்கான மேலதிக பயிற்ச்சி வடமாகாண ஆளுநரின் மேற்பார்வையில்...
உள்நாடு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நிகழ்வு

Shabeeb
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று காலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவ் திருவாதிரை உற்சவத்தில்...
நிகழ்வுகள்

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம்

Shabeeb
கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கு வளையத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் விசேட  தேவை உடைய மாணவர்களின் கல்வி வசதியை வழங்குவதற்கான மூலம்  மாணவர்களையும்...
நிகழ்வுகள்

காலணி மற்றும் புத்தகப்பை வழங்கி வைப்பு.

Shabeeb
பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தினால் மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் பாடசாலை மாணவர்கள் 21பேருக்கு காலணி மற்றும் புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது. மாந்தை...
நிகழ்வுகள்

சமூகநல்லிணக்கத்திற்கான மாபெரும் விளையாட்டுப்போட்டி

Shabeeb
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக இயங்கிவரும் சமூக சேவை நிறுவனமான GAFSO நிறுவனமானது HELVETAS, GCERF நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தி வரும் சமூக நல்லிணக்கம் மற்றும் வன்முறை தவிர்த்தல் எனும் “HOPE OF YOUTH” “இளைஞர்களின் நம்பிக்கை” எனும்வேலைத்திட்டத்தின் ஊடாக வன்முறை சிந்தனையை தவிர்த்தல் எனும் தொனிப்பொருளில்இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வானது கடந்த  ஞாயிறு (18) அம்பாறை மிகிந்தபுர வித்தியாலய மைதானத்தில் நடை பெற்றது. இந் நிகழ்வில் நான்கு மதங்களையும் சேர்ந்த  80 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதுடன் ஆர்வமாகபல்வேறு போட்டிகளில் பங்குபற்றினர். இலக்குக்கு எறிதல், கிரிக்கெட், பந்துபரிமாற்றம், பலூன்மாற்றுதல், சங்கீதகதிரை, யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல் என்பன இடம்பெற்றதுடன் சமூகநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமான நான்கு மத இளைஞர்களும் இணைந்து “நாம் இலங்கையர்” எனும் தலைப்பில் நாடகமொன்றையும் அரங்கேற்றி இருந்தனர். இன்  நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்தரத்னநாயக கலந்து கொண்டதுடன் , கப்சோ நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் அப்துல் ஜப்பார், அரசசார்பற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இனணப்பாளர் இர்பான், தேசிய இளைஞர் மன்ற அதிகாரிஹமீர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேகா எதிரிசிங்க, மற்றும் கப்சோ நிறுவனத்தின் திட்டபணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர். அம்பாறை மாவட்டத்தில் இன நல்லுறவை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் இவ் இளைஞர் குழு பல்வேறுசமூக நலன் விடயங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு இது மிகவும்வரவேற்க்க தக்க வேலைத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளுர் செய்திகள்

தம்பலகாமத்தில் ஊட்டச் சத்துக்களை அதிகரிக்க பால் மா வழங்கி வைப்பு!

Shabeeb
ஹஸ்பர்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்கு உட்பட்ட மந்தபோசனையுடைய குழந்தைகளுக்கு  தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பால் மா பக்கற்றுக்கள் வழங்கி...
நிகழ்வுகள்

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு.

Shabeeb
( எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்) டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்புமற்றும் குடும்பரீதியில் பெண்கள்,சிறார்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளம்ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு கல்முனையில் நேற்று முன்தினம்(18) இடம்பெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின்  நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலா இணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாலர்களாகசிரேஸ்ஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர்ஆகியோர் கலந்து கொண்டதுடன்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.எப்.சிபாயா, பி. ஜெனித்தா,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.நஜீப், எஸ்.நிஸாந்தினி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அலுவலக கணக்காளர் ஆர்.அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலார்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.
நிகழ்வுகள்

அனைத்து விதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும்  வேலைத் திட்டம் திருகோணணமலை மாவட்டத்திலும் ஆரம்பம்.

Shabeeb
அனைத்து விதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும்  வேலைத் திட்டம் – ஏ.எச்.ஏ. ஹுஸைன் பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் அனைத்து விதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும்  வேலைத் திட்டத்தின் முன்னாயத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் திருகோணணமலை மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார். திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்தில் வெள்ளிக்கிழமையன்று  16.12.2022 மாவட்டச் செயலாளர் டி.எச்.என் ஜயவிக்கிரம தலைமையில்  இச் செயல்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன பிராமனகே, பிரதான பொலிஸ் ரிசோதகர் எம்.என். ரஞ்ஜித் விஜேசூரிய தலைமையக பொலிஸ் அதிகாரி லக்ஸ்மன் வெலித்தரகே உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய மகளிர் சிறுவர் பிரிவு மாவட்ட அதிகாரி ஏ.எம். ஸ்வர்ணா தீபானி,  பொலிஸ் பாதுகாப்புப் படை அதிகாரிகள் திருகோணமலை அரசம ற்றும் தனியார் பொதுப் போக்குவரத்துச்  சேவையிலீடுபடும் சாரதிகள் நடத்துநர்கள்,  இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இழைக்கப்படும்  வன்முறைகள், இம்சைகள் வெறுப்புணர்வூட்டக் கூடிய சம்பவங்கள் போதைப் பொருள் விநியோகம் ஆகியவை இடம்பெறும்பொழுது அதுபற்றி பொதுமக்கள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் இலகு வழிமுறையிலமைந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் கொண்ட சுவரொட்டிகள் மக்கள் கூடும் பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களிலும் ஒட்டப்பட்டன. அங்கு உரையாற்றிய மாவட்டச் செயலாளர் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் நாடு பூராகவும் நடக்கும் வன்முறைகளகை; குறைப்பதற்கான முன்னோடித் திட்டமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொலிஸாரும் மற்றைய பொதுப்போக்குவரத்து ஊழியர்களும் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்யும்போது வன்முறைகளை நிறுத்துவதற்கு உதவ வேண்டும். பொதுப் போக்குவரத்தச் சேவையில் ஈடுபடுகின்ற ஒரு சாரதி நடத்துநரால் ஒரு பயணியின் நடத்தையை ஊகிக்க முடியும். போதைப் பொருட்கள் பள்ளிக் கூடங்கள் வரை பரவி விட்டன. அதன் விநியோக மார்க்கத்தைத் தடுக்க வேண்டும். இலங்ககையிலே சிறந்த மாவட்டம் திருகோணமலை என்ற பெயரை எடுக்க வேண்டும். பொலிஸாருக்கு தெரியப்படுத்தும் வழிமுறைகள் முக்கியம் என்று வலியுறுத்தியதோடு இந்த விடயத்தில் அனைவரும் ஒருமித்த அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஒத்துழைப்புடன்  சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் இச்செயல் திட்டத்தை அமுல்படுத்துகிறது.
KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி