February 21, 2024
KTV தமிழ்
Image default
உள்ளுர் செய்திகள்

கிண்ணியா மாயாஜால வித்தைக்காரர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!

திருகோணமலை -கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து அரச பேருந்தில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக பொலிஸ் போதைப் பொருள் திருகோணமலை பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பாலம் போட்டாறு பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 11 கிரேம் 120 மில்லி கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரர் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதுடன், விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

Related posts

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி