December 7, 2023
KTV தமிழ்
Image default
பிரதான செய்திகள்

202.10.23ம் திகதிய முக்கிய செய்திகளின் சுருக்கம்.

ஈஸடர் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் – ஆதாரங்களுடன் மு.கா.தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
சிலர் அரசியல் நோக்கம் ஒன்றை அடைந்து கொள்வதற்காக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப் பேராயரையும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஆதாரம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு மேலும் ஒரு எச்சரிக்கை
டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்த நாட்களில் மதிப்பீடுகளை மேற்கொள்வதாக அதன் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.

“டெலிகாம் நிறுவனத்தின் மதிப்பை நிர்ணயிக்க international finance corporation என்ற சர்வதேச நிதி நிறுவனம். அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக வங்கியுடன் தொடர்புடைய அமைப்பு. இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் என்ன? இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் தனியாருக்கு கடன் வழங்குகின்றன. தனியார் முதலீடுகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம், டெலிகாம் நிறுவனத்தின் சொத்துக்களை கணக்கிடுகிறது. இது மிகப் பெரிய மோசடி என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்துள்ள தீர்மானம்
நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை (23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பல தொழில்சார் பிரச்சினைகளின் அடிப்படையில் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்தார்.

அதிபர் நியமனம் தொடர்பில் புதிய தீர்மானம்
அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். “மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

தவளைகளின் இரத்தத்தை மட்டும் குடிக்கும் நுளம்பு இனம் இலங்கையில் கண்டுப்பிடிப்பு
கம்பஹா மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். Uranotaeniatrilineata என அழைக்கப்படும் இந்த நுளம்பு இனம் தற்போது இலங்கையில் பதிவாகியுள்ள மிகச்சிறிய நுளம்பு இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நுளம்பு 2-3 மில்லிமீற்றர் அளவுடையது எனவும் இந்த நுளம்புடன் இலங்கையில் 156 வகை நுளம்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் காசாவில் 266 பாலஸ்தீனியர்கள் கொலை – 117 பேர் குழந்தைகள்
கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் 266 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பலியானவர்களில் 117 பேர் குழந்தைகள் என்று டாக்டர் அஷ்ரப் அல் குத்ரா கூறினார்.

Related posts

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி