February 21, 2024
KTV தமிழ்
Image default
இயற்கை

மன முதிர்ச்சி என்றால் என்ன? யார் மனமுதிர்ச்சி அடைந்தவர்கள்?

What is Maturity of Mind ?

1) மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.
Correcting ourselves without trying to correct others.

2) அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
Accepting others with their short comings.

3)மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
Understanding the opinions of others from their perspectives.

4) எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
Learning to leave what are to be avoided.

5)மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
Leaving the expectations from others.

6)செய்வதை மன அமைதியுடன் செய்வது.
Doing whatever we do with peace of mind.

7) நம் புத்திசாலித்தனத்தை
மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
Avoiding to prove our intelligence on others.

? நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
Avoiding the status that others should accept our actions.

9) மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
Avoiding the comparisons of ourselves with others.

10) எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சித்தல்..
Trying to keep our peace in our mind without worrying for anything.

11) நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
Understanding the difference between the basic needs and what we want.

12) சந்தோஷம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
Reaching the status that happiness is not connected with material things.

ஒருவர் மனமுதிர்ச்சி அடைந்துவிட்டார் என்பதை எதன் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்?

முன்பெல்லாம் மனசிலே இருக்கிறதை பேசுறென்னு என் கூட இருக்குறவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருப்பேன். என் 3 வயசு பொண்ணோட பாட்டு க்ளாஸுக்கு கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வந்த சமயம் .க்ளாஸுல விட்டுட்டு வெளியே காத்திட்டு இருக்கிற மத்த லேடீசோட் நானும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருப்போம். எல்லோர் வீட்டு கதையும் அங்கே பேசுவாங்க. நான் ஏரியாவுக்கு புதுசுங்கிரதினாலே வேடிக்கை பார்த்திட்டிருப்பேன்.. அந்தக் கூட்டத்தில் இருந்து யாராவது முதல்லே கிளம்பி போனா, உடனே அவங்களைப் பத்தி பேச்சு நடக்கும். சில நாள் போகாம இருந்து, போனபோது அவங்க பாரவைலே மாற்றம் தெரிஞ்சுது சரி நம்மை பத்தியும் கதை ஓடியிருக்குன்னு புரிஞ்சிது. அதுக்கு மேல என்ன.. எப்போ அவங்கள பார்த்தாலும். ..இதோ வந்திடறேன் தான்…..

என்ன சொல்ல வர்றேன்னா எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு புரிஞ்சிக்கறது. அப்புறம் எனக்கு எல்லாம் தெரியும்ன்னு காட்ட வேண்டியதில்லை. தேவையான சமயததிலே வேண்டியதை செய்து காட்றது மட்டும் போதும்.

கழுகோட பலம் எல்லோருக்கும் தெரியும். ஆனா இந்தக் கழுகை கொத்தக் கூடியது காகம் மட்டும் தான். அதன் பின்னர் உட்கார்ந்திக்கிட்டு கழுகோட கழுத்தை கடிக்கும். கழுகு எதுவும் பண்ணாது.

நேரத்தை செலவழிக்காம தன் இறக்கையை விரிச்சு, உயர உயர பறக்க ஆரசம்பிக்கும். மேலே மேலே போக, ஆக்சிஜென் கிடைக்காம, காக்கா தவிச்சு போயி, கீழே விழுந்திரும்.

அதே போல நாமும் காகத்தோட நேரத்தை செலவழிச்சு சண்டை போட்றதை நிறுத்தி, நம்மோட உயரத்திற்கு கூட்டிட்டுப் போனா.தானாவே காணாப் போயிறுவாங்க!!

இது தான் ஒருத்தர மனமுதிர்ச்சி அடைஞ்ச்சுட்டாரு என்கிறதுக்கான அடையாளம்!!

படித்ததற்கு நன்றி. வேறென்ன சொல்லப் போறேன் ஆதரவு கொடுங்கன்னு கேக்கறதை தவிர.!! உங்க மனம் முதிர்ச்சி அடைஞ்சிருச்சின்னு காட்ட அதுவும் ஒரு வழி?

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி