December 7, 2023
KTV தமிழ்
Image default
உள்நாடு உள்ளுர் செய்திகள்

திருகோணமலையில் பௌத்த சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (14) இரண்டாது நாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வில்லூன்றி கந்தசாமி ஆலயத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த சின்னங்களை நேற்று (14) நிறுவ பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட ஏற்பாடுகள் செய்தனர்.

இதனையறிந்த தமிழ் தேசிய முக்கள் முன்னணி கட்சி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நேற்று காலையில் பௌத்த சின்னங்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்ட காணிக்கு முன்பாக ஓன்றிணைந்து தமிழ் உரிமைக்கு குண்டுகள் தீர்வாகாது, எமது நிலம் எமக்கு வேண்டும், மண் துறந்த புத்தருக்கு தமிழர் மண்மீது ஆசையா?

திருமலை எங்கள் நகரம், ஆக்கிரமிப்பிற்கு அடிபணியோம், வடக்கும் கிழக்கும் தமிழ் தாயகம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று ஞாயிறுக்கிழமை மீண்டும் 2 வது நாளாக தொடர்ந்து அந்த பகுதியில் காலை 9 மணி தொடக்கம் பகல் 2 மணிவரை ஏதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

Related posts

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி