ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது.
இப்போட்டியின் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சிக்சருக்கு சென்ற பந்தை கேட்க் பிடிக்க முயன்றபோது பலத்த காயமடைந்தார். பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வலியால் துடித்த அவருக்கு மருத்துவக் குழுவினர் வந்து உதவி செய்தனர்.
பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.