December 7, 2023
KTV தமிழ்
Image default
காலநிலை

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யும்…

மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை  பெய்யக்கூடும்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்:

காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்றானது தென்கிழக்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி