February 21, 2024
KTV தமிழ்
Image default
இயற்கை

வெற்றிலை ரசம்

தேவையானவை:

வெற்றிலை – 5,
நெய் – 2 சிட்டிகை,
கடுகு – கால் சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 3,
சீரகம் – 1 சிட்டிகை,
மிளகு – கால் சிட்டிகை,
பூண்டு – 5 பல், தக்காளி – 1,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் – 1/4 சிட்டிகை,
பெருங்காயம் – 1/4 சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எலுமிச்சைப் பழச்சாறு – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிது.

பக்குவம் :

காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தக்காளி, வெற்றிலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை தனியாக  கரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் விட்டு, கடுகு தாளித்துக்  புளி ரசத்தை விட்டு குறைவான அனலில்  கொதிக்கவிட வேண்டும். பின் அரைத்த வெற்றிலை விழுதைச் சேர்க்கவும். தேவையான உப்பும் சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சைப்பழச்சாறை விட்டால் சுவையான வெற்றிலை ரசம் தயார்.

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி