February 21, 2024
KTV தமிழ்

Author: niasfasmir

சுகாதாரம்

இரத்தத்திற்குத் தட்டுப்பாடு விரைந்து உதவுமாறு இரத்த வங்கிவேண்டுகோள்!

niasfasmir
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்குத்  தட்டுப்பாடு நிலவுவதால் குருதிக்கொடையாளிகள் விரைந்து வந்து இரத்த தானம் செய்யுமாறு அவ்வைத்தியாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி  கீர்த்திகா  மதனழகன்    வேண்டுகோள் விடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமை 04.04.2023 இரவு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வேண்டுகோளில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லா வகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே, உயிர் காக்கும் உன்ன சேவையினை மேற்கொள்ள குருதிக் கொடையாளர்களின் மகத்தான கொடைதேவைப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்ய உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக வந்து உதவுமாறு அந்த வேண்டுகோளில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி

உயர்தர விடைத்தாள் திருத்தம் நாளை அல்லது நாளை மறுதினம்.

niasfasmir
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள்...
உள்ளுர் செய்திகள்

இனம் தெரியாதவர்களால் வீடுடேன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது..

niasfasmir
கிளிநொச்சி  போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால்  வீடேன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது  வீட்டு உரிமையாளர்கள்வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில்...
உள்ளுர் செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு புதிய விலைகள்…

niasfasmir
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3,738 ரூபா)  05 கிலோகிராம் எரிவாயு...
உள்ளுர் செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

niasfasmir
இன்றையதினம் (04) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...
அரசியல்

தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (04)

niasfasmir
 தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) முற்பகல் கூடவுள்ளது. தேர்தல் தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...
உள்ளுர் செய்திகள்

கிளிநொச்சியில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301 பேர் பாதிப்பு.

niasfasmir
கிளிநொச்சியில் நேற்று(02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 91 குடுப்பங்களைச் சேர்ந்த 301...
உள்ளுர் செய்திகள்

எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படும்

niasfasmir
நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1000...
உள்ளுர் செய்திகள்

ஜனநாயக மக்கள்கட்சி பிரதேச செயலாளருக்கூடாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு கண்டனக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

niasfasmir
ஊர் மக்களின் உணர்வையும் கலாசார பாரம்பரியத்தையும் ஆளுநர் அறிந்திருக்க வேண்டும் நகரின் பாரம்பரியம், கலாசாரம், அடையாளச் சின்னங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை பற்றி ஆளுநர் என்றவகையில் நீங்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் எனக் கூறும் கண்டனக் கடிதமொன்றை ஜனநாயக மக்கள்கட்சி பிரதேச செயலாளருக்கூடாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்கு “எல்மிஸ் வல்கம” எனும் சிங்கள சமூகப் பெயரைச் சூட்டுவதற்கு ஆளுநர் எடுத்துள்ளநடவடிக்கைகளைக் கண்டித்து இந்தக் கடிதம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளரிடம் திங்களன்று 03.04.2023கையளிக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே அப்துல் வாஜித் தலைமையிலான  அக்கட்சியின்முக்கியஸ்தர்கள் இந்தக் கடித்தத்தை ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறாவிடம் மௌஜுத்திடம்கையளித்தனர். ஆளுநருக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.  ஏறாவூர் நகர் புன்னைக்குடா வீதியின்பெயர் மாற்றம் தொடர்பில் நாம் கவலையடைவதோடு  ஜனநாயக மக்கள் கட்சி என்ற வகையில், முன்மொழியப்பட்டபெயர் மாற்றத்திற்கு எங்களது எதிர்ப்பையும் தெரிவிக்க விரும்புகிறோம். ஏறாவூரின் வீதிப் பெயர்கள் இப்பிரதேச சமூகத்திற்கு மகத்தான கலாசார, வரலாற்று மற்றும் உணர்வுபூர்வமானமுக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். புன்னைக்குடா எனும் இப்பெயர் இன மதஅடையாளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம். கிழக்கின் ஆளுநர் என்ற வகையில், நகரின் பாரம்பரியம், கலாசாரம், அடையாளச் சின்னங்கள் மற்றும் எமதுமக்களின் வாழ்க்கை முறை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். எங்கள் நகரத்தின் அடையாளத்தை வடிவமைப்பதில் தெருக்களின் பங்கையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். ஏறாவூரில் உள்ள வீதிகளில் பெரும்பாலானவை ஏறாவூரில் குறிப்பிடத்தக்க கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளுடன்தொடர்புடைய பெயர்களைக் கொண்டுள்ளன. தெருக்களின் பெயர்கள் நம் மக்களின் உணர்வுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர் பிறந்த இடம் அல்லது வசிப்பிடத்தின் அடிப்படையில் ஒரு தெருவின்பெயரை மாற்றுவது, அந்த ஊரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் சாலைகளுக்குப் பெயர்களைத்தேர்ந்தெடுக்கும் உரிமையை மீறுவதாக நாங்கள் கருதுகிறோம். புன்னைக்குடா வீதியை ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை மாற்றுவதற்கான காரணங்கள் ஆக்கபூர்வமானவை அல்லதுஆரோக்கியமானவை என்று நாங்கள் நம்பவில்லை. அத்துடன், ஏறாவூருக்குச் செழுமையான வரலாறு உண்டுஎன்பதையும், இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து நகரின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர் என்பதையும்நினைவூட்ட விரும்புகிறோம். எனவே, நமது சமுதாயத்தின் பாரம்பரியத்திலும், அன்றாட வாழ்வியலிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தபுன்னைக்குடா சாலையை அதன் பெயர் மாறாமல், இயற்கையான நிலையில் பராமரிக்க தேவையானநடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளுர் செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

niasfasmir
கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கலந்துகொண்ட, போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி “விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்” என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள்...
KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி